சைமன் ஏகர் என்றழைக்கப்படும் நான் வேல்ஸ் நாட்டிலுள்ள பாங்கர் நகரத்தில் வசித்து வருகிறேன். இந்த இணையத்தளத்தில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்பவன் நான். எனது பூர்வீகம் வட இங்கிலாந்திலுள்ள லங்காஷயர் எனும் பிரதேசமாயிருப்பினும் பிரான்ஸ், ஜேர்ஸி, தாய்வான் மற்றும் ஐப்பான் போன்ற நாடுகளிலும் வசித்திருக்கிறேன்.
பிரெஞ்ச் மற்றும் ஜேர்மன் மொழிகளை இரண்டாம்பட்ச உயர்நிலைப்பள்ளியில் கற்றறிந்த நான் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சீன மற்றும் ஜப்பானிய மொழிகளைப் பயின்று கலைத்துறையில் இளமானிப் பட்டத்தைப் பெற்றேன். பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டை மண்டரீன் கற்க தாய்வானிலும் ஜப்பானிய மொழியைக் கற்க ஒஸாக்காவிலும் செலவிட்டதுடன் மட்டுமில்லாமல் மீதியிருந்த நேரத்தை சீனா, ஹாங்காங் போன்ற இடங்களில் கழித்திருந்தேன்.
பல்கலைக்கழகத்தில் பட்டமெய்திய பின்னர் புலமைப் பரிசுதவி மூலம் மீண்டும் ஒருவருடம் தாய்வான் சென்று சீன மொழியைக் கற்கும் வாய்ப்புக் கிடைத்திருந்தது. அதைத் தொடர்ந்து அங்கிருந்த பிரித்தானிய மன்றத்தில் நான்காண்டுகள் பணிபுரிந்த பின்னர் 1998 இல் தாயகம் திரும்பியிருந்தேன். பிரித்தானியாவில் என்னால் அச்சமயம் தொடங்கப் பெற்ற இணையப்பக்க வடிவமைப்பு மற்றும் மொழிபெயர்ப்பு சார்ந்த சுய தொழில் முயற்சி வெற்றிபெறத் தவறியிருந்தாலும் அது இப்போது நீங்கள் உலாவரும் இத் தளத்தின் மூலகர்த்தாவாக இருந்திருக்கிறது. இந்நிலையில் பிரைட்டனில் பன்மொழியாளுனராக ஒரு வேலையும் அமைந்து வந்திருந்தது.
ஆனால் 2008 இல் கழிமிகைக் காரணமாக நான் வேலையிழந்திருந்த நிலையிலும் ஒம்னிகுளொட் என்கின்ற இந்த இணையத் தளத்தின் மூலம் கிடைத்திருந்த வருமானம் அன்றாட வாழ்க்கைக்குப் போதுமாக இருந்தது. எனினும் பிரைட்டனில் வசிப்பதற்கல்ல. வாழ்க்கையில் ஒரு மாற்றம் தேவையெனப் பட்டதால் பிற தொழில்களைப் பரிசீலித்துப் பார்த்தேன். ஆசிரியர் தொழில், பேச்சு மற்றும் மொழி சம்பந்தப்பட்ட சிகிச்சை மட்டுமின்றி வட்டரங்குக் குழுவில் (சர்க்கஸ்) சேர்ந்து சுற்றித் திரிதலையும் கூட விட்டு வைக்கவில்லை. இறுதியில் பாங்கர் பல்கலைக் கழகத்தில் மொழியியலில் முதுமானிப் பட்டப்படிப்பை மேற்கொள்ளுவதென முடிவெடுத்தேன். அன்றிலிருந்து பாங்கரிலேயே இன்று வரை வசித்தும் வருகிறேன்.
எனக்கு ஆங்கிலம், பிரெஞ்ச், வெல்ஷ், மண்டரீன் மற்றும் ஐரிஷ் மொழிகளில் சரளமாகப் பேச முடியும். ஜேர்மன், ஜப்பானியம், ஸ்கொட்லாந்தின் கேல்லிக், ஸ்பானியம், மான்க்ஸ் மற்றும் எஸ்பரான்டோ ஆகிய மொழிகளில் சம்பாஷிக்கும் வல்லமையுமுண்டு. இதைவிட தாய்வானியம், கன்டனீஸ், இத்தாலியம், போர்த்துக்கேயம், செக்கியம், ருஷியம், பிரெட்டொனியம், டச்சு, பிரித்தானிய சைகை மொழி, கோர்னியம், சுவீடனியம், ருமேனியம் மற்றும் டொக்கிப் போனா ஆகிய மொழிகளில் பரிச்சயமும் உண்டு.
நான் பன்மொழிகளைப் பயின்ற சாகசக் கதைகளுக்கு.
மொழிகள் தவிர என்னுடைய இதர ஆர்வங்களில் முதன்மையானது இசையாகும். தேவாலயப் பாடகர் குழாமிலும் மற்றும் வேறு குழுக்களிலும் சேர்ந்து பாடுதல், வரிவமைத்தல், இசையமைத்தல், இசைக்கருவிகளை இசைத்தல் எனப் பல்வேறு பங்குகளையாற்றியிருப்பேன். இசைக்கச்சேரிகளுக்குச் செல்வதும் முக்கிய பொழுதுபோக்கு. புத்தகங்கள் வாசிப்பதும் எத்துமான விளையாட்டில் களிப்பதும் மற்றைய பொழுதுபோக்குகள்.
என்னுடைய பெயரை உச்சரித்துப் பார்க்க உங்களுக்கு ஆர்வமாயிருக்கிறதா? அதை ஏகர் அல்லது /'eɪgə/ எனச் சொல்லிப் பார்க்கலாம். இப்பெயர் சக்ஸன் மொழிப் பெயரான ஏட்கர் இலிருந்து திரிபுற்றிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
Tamil version by Loganathan Parthipan
Information about Tamil | Arwi Arabic script for Tamil | Phrases | Numbers | Time | Family words | Tower of Babel | Books about Tamil on: Amazon.comand Amazon.co.uk [affilate links]
অসমীয়া, Bahasa Indonesia, Bahasa Melayu, বাংলা, Brezhoneg, català, čeština, Chabacano, Cymraeg, dansk, Deutsch, eesti, English, Englisc, العربية, ελληνικά, español, Esperanto, فارسى, français, Gaeilge, Gaelg, Gàidhlig, Gutiska (𐌲𐌿𐍄𐌹𐍃𐌺𐌰), 한국어, Hiligaynon, Hindi, Íslenska, italiano, עברית, Kadazan, Kala Lagaw Ya, Kernewek, Lingua Latina, magyar, मराठी, монгол, Neddersassisch, Nederlands, 日本語, norsk, occitan, ภาษาไทย, polski, português, român, Русский, Shqip, slovenčina, suomi, Svenska, Tagalog, Tamasheq, தமிழ், Türkçe, ײִדיש, 中文
About this site | Omniglot - a potted history | About me | My language learning adventures | My musical adventures | My singing adventures | Song writing | Tunesmithing | My juggling adventures
[top]
You can support this site by Buying Me A Coffee, and if you like what you see on this page, you can use the buttons below to share it with people you know.
If you like this site and find it useful, you can support it by making a donation via PayPal or Patreon, or by contributing in other ways. Omniglot is how I make my living.
Note: all links on this site to Amazon.com, Amazon.co.uk and Amazon.fr are affiliate links. This means I earn a commission if you click on any of them and buy something. So by clicking on these links you can help to support this site.
[top]